/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம்
/
மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம்
ADDED : ஜன 28, 2024 06:18 AM

வடலுார், : வடலுார் அடுத்த மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி வளாகத்தில் நேற்று திருஅறை தரிசன விழா நடந்தது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபையில் 153ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா கடந்த 25ம் தேதி நடந்தது. நேற்று, வள்ளலார் சித்தி பெற்ற வடலுார் மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடந்தது.
அதையொட்டி, வடலுார் சத்ய ஞான சபையிலிருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி அலங்கரிக்கப்பட்டு காலை 10:00 மணியளவில் வள்ளலார் நடந்து சென்ற பார்வதிபுரம், நைனார்குப்பம், செங்கால் ஓடை, கருங்குழி, தீஞ்சுவை நீரோடை வழியாக மதியம் 12:00 மணிக்கு திருஅறை மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, மேட்டுக்குப்பம் கிராம மக்கள் சீர்வரிசை, மேளதாளத்துடன் வரவேற்றனர்.
பின், வள்ளலார் சித்தி பெற்ற அறை திறக்கப்பட்டு பூஜை நடந்து, 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் திருஅறையை தரிசனம் செய்தனர்.