/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீ சரஸ்வதி பள்ளியில் திருக்குறள் போட்டி
/
ஸ்ரீ சரஸ்வதி பள்ளியில் திருக்குறள் போட்டி
ADDED : ஜன 09, 2025 12:40 AM

விருத்தாசலம்; பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தையொட்டி, டாக்டர் இ.கே.சுரேஷ் கலை பண்பாட்டு மையம் சார்பில், விருத்தாசலம் ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில், மாணவர்களுக்கு திருக்குறள் திறன் போட்டி நடந்தது.
இதில், கல்வி குழும நிறுவனர் சுரேஷ் தலைமை தாங்கினார். இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாவட்ட செயலர் ராஜமோகன், சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் சிவனேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
இதில், ஒவியம், இசை வடிவில் திறக்குறள் ஒப்புவித்தல், குறள் ஒப்புவித்தல், திருக்குறள் எழுத்து போட்டிகள் நடந்தது.
800 திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவி இசை முதல் பரிசு, 500 குறள் ஒப்புவித்த சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவி தரண்யா இரண்டாம் பரிசு, 300 குறள் ஒப்புவித்த மாணவி நவீனா மூன்றாம் பரிசு பெற்றனர். ஸ்ரீ சரஸ்வதி மெடரிக் பள்ளி முதல்வர் சக்திவேல், சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் அப்துல் நபி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.