/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருப்பாதிரிப்புலியூர் பள்ளியில் திருக்குறள் திருவிழா
/
திருப்பாதிரிப்புலியூர் பள்ளியில் திருக்குறள் திருவிழா
திருப்பாதிரிப்புலியூர் பள்ளியில் திருக்குறள் திருவிழா
திருப்பாதிரிப்புலியூர் பள்ளியில் திருக்குறள் திருவிழா
ADDED : டிச 24, 2024 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் வினாடி வினா பேட்டி, பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் இந்திரா தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ரேவதி வரவேற்றார்.
ஆசிரியைகள் மீனா, மலர்கொடி மற்றும் சபாஷ் ராஜு திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் மாணவர்களை தேர்வு செய்தனர்.
உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
தமிழ் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.