ADDED : மார் 19, 2026 04:25 AM

அ நிறம் | அளவு
கடலுார்: சிதம்பரம் அடுத்த பரிவிளாகம் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் திருவிழா நடந்தது.
பள்ளி தலைமைஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். தமிழ்ஆசிரியர் நர்மதா வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளிடையே திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் அருள்முருகன், தாரணி போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
