ADDED : செப் 19, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம் மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் பரமசிவம் வரவேற்றார். திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். செயலாளர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
ஆசிரியைகள் ஜெயந்தி, சித்ரா, லலிதா, கோமதி, உமா, சகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.