தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இமாகுலேட் கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு

இமாகுலேட் கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு

இமாகுலேட் கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு


UPDATED : அக் 10, 2026 07:29 PM

ADDED : அக் 10, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:29 PM ADDED : அக் 10, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் ‘குறளோடு கொஞ்ச நேரம்’ என்ற தலைப்பில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது. இமாகுலேட் மகளிர் கல்லுாரி நிர்வாகம் மற்றும் உலக திருக்குறள் பேரவை இணைந்து கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கல்லுாரி செயலர் நிர்மலா ராணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுசீலா தேவி முன்னிலை வகித்தார். பேராசிரியர் கலையரசி வரவேற்றார்.

உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் வினாடி வினா போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவி ேஹமலதா முதலிடம், ேஹமஸ்ரீ இரண்டாமிடம், மித்ரா மூன்றாமிடம் பிடித்தனர்.

வினாடி வினா போட்டியில் மாணவி சந்தியா முதலிடம், ரேணுகா தேவி இரண்டாமிடம், பவித்ரா மூன்றாமிடம் பிடித்தனர். தமிழ் துறை தலைவர் தீபா, பேராசிரியர் அன்னபூரணி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us