/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிந்தராஜ பெருமாளுக்கு புவனகிரியில் திருமஞ்சனம்
/
கோவிந்தராஜ பெருமாளுக்கு புவனகிரியில் திருமஞ்சனம்
ADDED : மார் 17, 2025 06:39 AM

புவனகிரி : மாசி மக உற்சவத்தை முன்னிட்டு தில்லை கோவிந்தராஜ பெருமாள் புவனகிரியில் எழுந்தருளல் மற்றும் திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு புவனகிரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானமும், மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாண வைபோகமும் நடந்தது. சுற்று பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் உதயசூரியன் தலைமையிலான விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.