சபா ராஜேந்திரன் வெற்றி பெறுவார்: திருமாவளவன் நம்பிக்கை
சபா ராஜேந்திரன் வெற்றி பெறுவார்: திருமாவளவன் நம்பிக்கை
ADDED : ஏப் 06, 2026 03:43 PM

நெய்வேலி: நெய்வேலி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.
நெய்வேலி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது திருமாவளவன் கூறுகையில்; நெய்வேலி தொகுதியில் உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டது. வி.சி., கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் உங்களது வெற்றிக்காக முழுமையாக களப்பணியாற்றுவார்கள். வி.சி.,கட்சி மட்டுமின்றி நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., இந்திய கம்யூ., மா.கம்யூ., உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் எந்த விதமான பாகுபாடும் இன்றி, இத்தேர்தலில் தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகளின் வெற்றிக்காக தீவிரமாக களப்பணியாற்றவோம் என கூறினார்.
