ADDED : ஜன 17, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
மன்ற செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார். பேராசிரியர் அண்ணாமலை, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மன்ற தலைவர் நாகராஜன், திருக்குறள் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசளித்து பாராட்டினார்.
ஓவிய ஆசிரியர் மனோகரன், திருக்குறளின் பெருமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர் அனுபாரதி நன்றி கூறினார்.