ADDED : மார் 03, 2026 02:44 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று கோவில் நடை மூடப்படுகிறது.
கடலுார், திருவந்திபுரத்தில் பிரசித்திப் பெற்ற தேவநாத சுவாமி கோவில், தேவநாத சுவாமிக்கு மாசி மகத்தை முன்னிட்டு இன்று 3ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் முடிந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்து, தீர்த்தவாரி நடக்கிறது.
மேலும், சந்திர கிரகணம் நிகழ்வதால் இன்று அதிகாலை 3:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் மூலவரை தரிசனம் செய்ய இயலாது.
இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
