/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூதாமூர் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
பூதாமூர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஜூலை 25, 2025 11:04 PM

விருத்தாசலம்; பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மகா மாரியம்மன் கோவிலில், 43வது ஆடி செடல் திருவிழா, கடந்த 20ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக ஆடி இரண்டாம் வெள்ளியொட்டி, நேற்று மாலை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
சுமங்கலி பெண்கள் ஏராளமானோர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று குங்கும வழிபாடு செய்தனர். இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். வரும் 1ம் தேதி மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் செடலணிந்து ஊர்வலமாக வரும் உற்சவம் நடக்கிறது.
2ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், கஞ்சிக்கலய ஊர்வலம், 3ம் தேதி பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து அம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெறும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.