திட்டக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
திட்டக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 09:31 PM

ராமநத்தம்: திட்டக்குடி வட்டார விஸ்வகர்மா சங்க நிர்வாகிகளிடம் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
திட்டக்குடி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் முருகுமாறன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும், பல்வேறு கூட்டமைப்புகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தொடர்ந்து, நேற்று திட்டக்குடி வட்டார விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., வர்த்தகரணி மாநில துணை செயலர் சக்திவேல், நகர செயலர் நீதிமன்னன் முன்னிலை வகித்தனர்.
திட்டக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் வரும், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க
கோரிக்கை விடுத்தார்.
சங்க நிர்வாகிகள் சேகர், செல்வராசு, சுப்ரமணியன், அ.தி.மு.க., நிர்வாகிகள் முல்லைநாதன், அருள், முத்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
