ADDED : மார் 16, 2026 04:25 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தேதியை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின்பேரில், திட்டக்குடி (தனி) தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு, தேர்தல் துணை தாசில்தார் சீனிவாசன் தலைமையிலான ஊழியர்கள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
இதேபோன்று, பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அறை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
