துாத்துக்குடி-நாரசாபூர் ரயில் பண்ருட்டியில் நிறுத்த நடவடிக்கை
துாத்துக்குடி-நாரசாபூர் ரயில் பண்ருட்டியில் நிறுத்த நடவடிக்கை
UPDATED : செப் 01, 2026 10:42 PM
ADDED : செப் 01, 2026 09:22 PM
பண்ருட்டி:துாத்துக்குடி-நாரசாபூர் ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் பண்ருட்டி நிறுத்தத்துடன் இயங்கி வந்த நிலையில் அந்த ரயில் சேவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீட்டிக்கவில்லை.
அதற்கு மாறாக அதே அட்டவணையில் தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் நாரசாபூர் வரை புதிய சிறப்பு ரயிலாக அறிவிக்கப்பட்டது. அந்த ரயில், பண்ருட்டியில் நிறுத்தம் தரப்படவில்லை.
இந்த ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல பண்ருட்டி ரயில் உபயோகிப்பாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது. அதனையேற்று, விஷ்ணுபிரசாத் எம்.பி., மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார்.
அதனையேற்று, துாத்துக்குடி-நாரசாபூர் சிறப்பு ரயிலுக்கு பண்ருட்டி நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்த அமைச்சர் மற்றும் விஷ்ணுபிரசாத் எம்.பி.,க்கு பண்ருட்டி ரயில் நிலைய பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
