ADDED : ஆக 11, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி ராணி, 45. அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பானிபூரி கடை வைத்துள்ளார். கடந்த 5ம் தேதி இரவு 9:00 மணியளவில் கடையை மூடிவிட்டு ராணி புறப்பட்டபோது, அங்கு மதுபோதையில் வந்த சந்துரு உள்ளிட்ட மூவர் அவரை ஆபாசமாக திட்டி தாக்கினர்.
தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த வீரமணி, மூர்த்தி, அமிர்தலட்சுமி ஆகியோரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ராணி புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து, காந்தி நகர் குணசேகரன் மகன் சந்துரு, 32, தெய்வசிகாமணி மகன் சின்னராசு, 31, உத்திராபதி மகன் ஸ்ரீராம், 35, ஆகியோரை கைது செய்தார்.
