ADDED : மே 23, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த தேவங்குடி கோவிந்தராஜ் மனைவி சீதா, 35, பாசிகுளம் ராஜன் மகன் கலாமணி, 48, கருவேப்பிலங்குறிச்சி கேசவன் மகன் ராஜா, 47, ஆகியோரை பிடித்த விசாரித்தன ர்.
அவர்களிடம் இருந்து 30 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய் யப்பட்டன. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, சீதா, கலாமணி, ராஜா ஆகிய மூவரை கைது செய்தனர்.
