ADDED : செப் 24, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம், செப். 25–
காரில் குட்கா கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஊமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கொம்படிகுப்பம் டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 85 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, குட்கா கடத்தலில் ஈடுப்பட்ட சேலம் வேப்பம்பூண்டி செந்தில்குமார்,47; சேலம் சிவசங்கராபுரம் இளங்கோ,27; குறிஞ்சிப்பாடி வடக்கு தெரு சந்திரகாசன்,43; ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், இவர்கள் கடத்தி வந்த குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
