ADDED : ஜன 12, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த, சரித்திர பதிவேடு குற்றவாளி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி மனைவி விஜயசாந்தி, 33; இவர் ஆலடி கிராமத்தில் டைலரிங் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்த முரளி, 23; ராஜதுரை, 26, சரித்திர பதிவேடு குற்றவாளி; முருகன், 50, ஆகியோர், நேற்று ஆலடியில் உள்ள விஜயசாந்தியின் டைலரிங் கடைக்கு வந்து, அவரை திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, விஜயசாந்தி கொடுத்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, முரளி, ராஜதுரை, முருகன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
