/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
40 கிலோ குட்கா பறிமுதல் சிதம்பரத்தில் மூவர் கைது
/
40 கிலோ குட்கா பறிமுதல் சிதம்பரத்தில் மூவர் கைது
ADDED : செப் 25, 2024 06:40 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் 40 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ், கஜேந்திரன், மணிகண்டன், ஸ்ரீதர் ஆகியோர், அண்ணாமலை நகர் ராஜேந்திரன் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக பைக்கில் வந்த மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தை சேர்ந்த கலியமூர்த்தி,50; என்பவரை பிடித்து, சோதனை செய்தனர்.
அவர், சிதம்பரம் பகுதியில் விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் ரூ. 5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவரது சகோதரர் செல்வராஜ், குட்கா மொத்த வியாபாரி என தெரியவந்தது. அதையடுத்து, ஓமக்குளத்தில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை மேற்கொண்டு, 40 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1.30 லட்சம். தலைமறைவான செல்வராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், சிவபுரி சாலையில் பெண்ணழகி, 38; என்பவரின் மளிகை கடையில் இருந்து 100 பாக்கெட் ஹான்ஸ், வேளக்குடியை சேர்ந்த அண்ணாதுரை,52; என்பவரது மளிகை கடையில் 100 பாக்கெட் ஹான்ஸ் பறிமுதல் செய்து, இருரையும் கைது செய்தனர்.