ADDED : மார் 29, 2026 10:40 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நா.த.க., நிர்வாகியை தாக்கிய 9 பேரில், மூவர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் லுாக்காஸ் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்பரசன், 33; நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர். இவருக்கும், காட்டுக்கூடலுார் சாலையை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், ஜங்ஷன் சாலையில் உள்ள மெடிக்கலில் இருந்து புறப்பட்ட அன்பரசனை, நாம் தமிழர் கட்சியில் வேலை செய்யக்கூடாது எனக்கூறி செந்தில் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
அதில், படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், செந்தில் உட்பட 9 பேர் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, ஜாகிர்உசேன் மகன் தாரிக், 28, அக்பர்அலி மகன் சதாம்உசேன், 30, ரவி மகன் வினித், 29, ஆகியோரை கைது செய்தனர்.
