sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 செயின் பறிப்பு வழக்கில் பண்ருட்டியில் மூன்று பேர் கைது

/

 செயின் பறிப்பு வழக்கில் பண்ருட்டியில் மூன்று பேர் கைது

 செயின் பறிப்பு வழக்கில் பண்ருட்டியில் மூன்று பேர் கைது

 செயின் பறிப்பு வழக்கில் பண்ருட்டியில் மூன்று பேர் கைது


ADDED : பிப் 23, 2026 03:40 AM

Google News

ADDED : பிப் 23, 2026 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் பெண்ணிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெரு அரசூர் மெயின்ரோட்டில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது அவ்வழியாக வந்த டி.என்.31.சி.எக்ஸ்.0036 என்கிற கருப்பு கலர் பல்சர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் தர்கா தெருவை சேர்ந்த ஷாஜகான் மகன் மதுவூன்அலி, 29; பண்ருட்டி எல்.என்புரம் சேர்ந்த வ.உ.சி.நகர் சேர்ந்த அப்பாஸ் மகன் சாருதீன், 20; பண்ருட்டி அவுலியா நகர் முதல் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அப்துல்லா,23; ஆகியோரிடம் சந்தேகமடைந்த போலீசார் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் இவர்கள் மூவரும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதில் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் காணாமல் போனதாக வழக்குபதிவு செய்யப்பட்ட கடந்த 2ம்தேதி பட்டாம்பாக்கம் - மாளிகைமேடு சாலை, எம்.புதுப்பாளையம் ரோட்டில் ஒரு பெண்ணிடம் தங்க செயினை அறுத்து சென்றதும் தெரியவந்தது. போலீசார் 3 பேரை கைது செய்து, அவர்கள் திருடிய 7 மோட்டார் சைக்கிளையும் , 2 கிராம் தங்கம் காயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதியில் திருட்டு வாகனங்களை விற்பனை செய்ப வர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us