கள்ளக்காதலி செலவுக்காக செயின் பறிப்பு வேப்பூர் அருகே மூவர் கைது
கள்ளக்காதலி செலவுக்காக செயின் பறிப்பு வேப்பூர் அருகே மூவர் கைது
ADDED : ஜூன் 18, 2026 07:42 AM

வேப்பூர்: வேப்பூர் அருகே கள்ளக்காதலிக்கு செலவு செய்ய, பாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்து சென்ற பேரன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில், மடக்கி விசாரித்தனர்.
அவர்கள், வேப்பூர் அடுத்த சிறுநெசலுார் கதிர்வேல் மகன் இளங்கதிர், 27, இவரது நண்பர் ஆவட்டி ரவி மகன் கவுதம், 20, என்பது தெரியவந்தது.
அவர்கள், மூதாட்டி ஒருவரிடம் 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி வந்ததாக தெரிவித்தனர்.
விசாரணையில், இளங்கதிருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி அனிதா, 35, என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. அனிதாவிற்கு பணம் தேவைப்பட்டதால், இளங்கதிர் தனது பாட்டியான பாப்பா அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து வந்ததாக தெரிவித்தார்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட இளங்கதிர், 27, கவுதம், 20, கள்ளக்காதலி அனிதா, 35, ஆகியோரை கைது செய்தனர்.
