ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் :சொரத்துார் ராஜேந்திரன் உறுதி
ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் :சொரத்துார் ராஜேந்திரன் உறுதி
ADDED : ஏப் 20, 2026 11:19 PM

கடலுார்: நெய்வேலி தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் நேற்று தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நெய்வேலி, பாரதி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். மேலும் வர்த்தகர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க.,ஆட்சி அமைந்ததும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி ஆண்டுக்கு முன்று விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும்.
ஊரக வேலை திட்டத்தில் வழங்கப்படும், 100 நாட்கள் வேலை, 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். மகளிரைப் போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பஸ் பயண திட்டம் வழங்கப்படும்.
குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வரிச்சுமை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்க, 10ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெய்வேலி தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருமலைவாசன், வடக்குத்து கிளை செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
