பைக்குகள் மீது வேன் மோதல் த.வெ.க.,வினர் உட்பட மூவர் பலி
பைக்குகள் மீது வேன் மோதல் த.வெ.க.,வினர் உட்பட மூவர் பலி
ADDED : செப் 05, 2026 03:17 AM

கிள்ளை: சிதம்பரம் அருகே பைக்குகள் மீது, டெம்போ வேன் மோதியதில், த.வெ.க., நிர்வாகிகள் குகன், 24, கலைராஜன், 47, உட்பட மூவர் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், மேல்குறியாமங்கலத்தைச் சேர்ந்தவர் குகன். த.வெ.க., முகாம் செயலர். கீழ்குறியாமங்கலத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். த.வெ.க., கிளை செயலர். எலக்ட்ரீஷியன்களான இருவரும் நேற்று காலை, வேலைக்காக பைக்கில் சிதம்பரத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காலை, 10:00 மணிக்கு, சி.முட்லுார் மண்டபம் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த டெம்போ வேன், கலைராஜன் பைக் மற்றும் முன்னாள் சென்ற மற்றொரு பைக் மீது மோதியது. இதில், குகன், கலைராஜன், மற்றொரு பைக்கில் சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், 29, ஆகியோர் உயிரிழந்தனர். கிள்ளை போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
