தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மும்முனை மின்சாரம் பற்றாக்குறை: டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு

மும்முனை மின்சாரம் பற்றாக்குறை: டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு

மும்முனை மின்சாரம் பற்றாக்குறை: டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு


UPDATED : ஜூன் 09, 2026 10:29 PM

ADDED : ஜூன் 09, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 10:29 PM ADDED : ஜூன் 09, 2026 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: டெல்டாவில் மும்முனை மின்சாரம் முறையற்ற விநியோகத்தால் சாகுபடி நிலங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து குறுவை நெல் பயிர்கள் கருகும் அபாயத்தில் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் சித்திரை கார் பட்ட நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டாவில் டி.பி.எஸ் 5, ஏ.எஸ்.டி 21, கோ 51 போன்ற நெல் ரகங்கள் 10,000 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். முன்பட்ட குறுவை சாகுபடியில் தற்போது 30 முதல் 25 நாட்கள் கொண்ட நெல் பயிர்களாக உள்ளது.

டெல்டா பகுதியான எய்யலுார், ரெட்டியூர், அருண்மொழிதேவன், கீழக்கடம்பூர், எடையார், ராதாமூர், வாண்டையார்இருப்பு, குமராட்சி, புளியங்குடி போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முன்பட்ட குறுவை சாகுபடிக்கு போதிய சீரான மும்முனை மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரான மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வயல்கள் வெடித்து காய்ந்து காணப்படுகிறது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கேள்விக் குறியாக உள்ளது. நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்த நிலையில் முன்முனை மின்சாரம் பற்றாக்குறையால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவருகின்றனர். மாவட்ட நிர்வாகம் குறுவை சாகுபடிக்கு சீரான மும்முனை மின்சாரம் கிடைக்க உறுதி செய்தால் தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us