வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசி தீ வைப்பு
வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசி தீ வைப்பு
ADDED : ஏப் 03, 2026 07:55 PM

கடலுார்: கடலுாரில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் மல்லிகா,70; இவர் கணவர் பாலு,80; மகன் ஆனந்த்,40; பேரன் கவுதம்,22; ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 2:00 மணிக்கு ஆனந்த், இயற்கை உபாதைக்காக, வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல், 200 மி.லி., அளவு பிளாஸ்டிக் பாட்டிலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து வீட்டின் மீது வீசி விட்டு தப்பியோடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சிறிது நேரத்தில் வாசல் எதிரில் தீ பரவியது. உடன், அவர் கூச்சலிடவே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மல்லிகா உள்ளிட்ட 3 பேரும், வெளியே வந்து தீயை அணைத்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விழுப்புரம் தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜிவ், தடயங்களை சேகரித்தார்.
இதுகுறித்து கவுதம் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
