/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் பரிசோதனை
/
விருதை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் பரிசோதனை
விருதை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் பரிசோதனை
விருதை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் பரிசோதனை
ADDED : ஏப் 22, 2025 07:38 AM

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் 9.50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி டிக்கெட் கவுன்டர் பரிசோதனையாக நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.
சென்னை-திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், சரக்கு ரயில் மற்றும் தேஜஸ், ஹம்சபார், வந்தே பாரத் என 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும்; பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில் வசதி உள்ளது. இதனால் கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் கல்வி, வணிகம், மருத்துவ ரீதியாக பயனடைகின்றனர்.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 525 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தில், 9.50 கோடி ரூபாயில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அலங்கார முகப்பு, நவீன வசதிகளுடன் கூடிய டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை, 4 நடைமேடைகளிலும் மேற்கூரை, இருக்கைகள், குடிநீர், கழிவறைகள், சிக்னல் அறை, சிசிடிவி கேமராக்கள் ஆகிய வசதிகள் தன்னிறைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், ஓரிரு வாரங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். தற்போது, குறுகிய இடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் டிக்கெட் கவுன்டரில் பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வந்தனர்.
இதையடுத்து, திறப்பு விழாவிற்கு முன்னதாக சோதனை ஓட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய கட்டடத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல், டிக்கெட் கவுன்டர் பரிசோதனையாக நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. விசாலமான இடத்தில் இருக்கைகள், மின்விசிறிகள் அடங்கிய இடத்தில் டிக்கெட் பெற்றபடி, பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.