/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
/
சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : நவ 10, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதனையொட்டி நேற்று வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் உற்சவர் மற்றும் மூலவர், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் மூலவர் ஆகிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் ராஜாமணி மற்றும் விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.