/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை புத்தகம்
/
பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை புத்தகம்
ADDED : டிச 23, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவந்திபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி விஜயராகவன், ஓய்வுபெற்ற ஸ்டேட் வங்கி அலுவலர் பாபு ஆகி யோர் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை புத்த கங்கள் வழங்கி, ஆண்டாள் பாவை நோன்பு குறித்து விளக்கமளித்தனர்.
அப்போது, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவி அபுரவமஹதி நன்றி கூறினார்.