/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு துவக்கம்
/
திட்டக்குடி அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு துவக்கம்
திட்டக்குடி அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு துவக்கம்
திட்டக்குடி அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு துவக்கம்
ADDED : டிச 20, 2024 04:35 AM

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ், திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வீரபாண்டியன் வரவேற்றார். இளநிலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கடராஜன், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், இரயில்வே, அஞ்சல் துறை, காவல், வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., பணிகளின் விபரங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பணி வாய்ப்புகள், மத்திய அரசு வழங்கும் வேலை வாய்ப்பு செய்திகள், வேலை வாய்ப்பு பெறுவதற்குகான வழிமுறைகள் ஆகியன குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.