/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திற்கு... எதிர்ப்பு; காய்கறி வியாபாரிகள் திடீர் போராட்டம்
/
விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திற்கு... எதிர்ப்பு; காய்கறி வியாபாரிகள் திடீர் போராட்டம்
விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திற்கு... எதிர்ப்பு; காய்கறி வியாபாரிகள் திடீர் போராட்டம்
விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திற்கு... எதிர்ப்பு; காய்கறி வியாபாரிகள் திடீர் போராட்டம்
UPDATED : ஜன 29, 2024 07:34 AM
ADDED : ஜன 29, 2024 06:29 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடைகளில்கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் 90 காய்கறி கடைகள் இயங்கின. இப்பகுதியில், 5.41 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் கட்டும் பணி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
இந்நிலையில், ஒரு பகுதியில் 40 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது காய்கறி மார்க்கெட் இயங்கி வரும் பகுதியில் 54 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, ஜங்ஷன் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடம், விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம், ராஜவேல் வீதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடம், ஜங்ஷன் சாலையில் உள்ள காங்., கட்சி மைதானம் உள்ளிட்ட 6 இடங்களை நகராட்சி நிர்வாகம் தேர்வு செய்து, ஒதுக்கீடு செய்துள்ளது.
வரும் 31ம் தேதிக்குள் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்து மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் அமைத்துக்கொள்ள வேண்டும் என, நேற்று முன்தினம் வியாபாரிகளிடம், நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் நேற்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கடைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'காய்கறி மார்க்கெட்டில் தற்போது 90 கடைகள் உள்ளன. முறையான அறிவிப்பு இல்லாமல், இரண்டு நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய சொல்கின்றனர்.
கடந்த 22ம் தேதி ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில், தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் 40 கடைகளில் நாங்கள் தற்காலிக கடை அமைத்துக்கொள்கிறோம் என கூறினோம்.
ஆனால், அதற்குள் நகராட்சி நிர்வாகம் வரும் 31ம் தேதிக்குள் கடைகளை காலி செய்து, வேறு இடங்களில் வைக்க நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதனை கண்டித்து, முதல் கட்டமாக கடைகளில் கருப்புகொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்று (29ம் தேதி) ஆர்.டி.ஓ., விடம் இது சம்பந்தமாக மனு கொடுக்க உள்ளோம். இதே நிலை நீடித்தால் போராட்டத்தை தொடருவோம்' என்றனர்.