தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகையிலை மூட்டை பறிமுதல் 

 புகையிலை மூட்டை பறிமுதல் 

 புகையிலை மூட்டை பறிமுதல் 


ADDED : மார் 24, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாலம் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மூட்டைகளை கொண்டு சென்ற டெம்போவை, நிலை கண்காணிப்பு குழுவினர் பிடித்து, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டணத்தில், நிலை கண்காணிப்பு குழு அதிகாரி கலைமணி தலைமையில், போலீசார் பிரபு, ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த டெம்போ ஒன்றை சோதனை செய்தனர். அதில், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 32 புகையிலை மூட்டைகள் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின், டெம்போவை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர், விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் தஞ்சாவூரை சேர்ந்த டெம்போ டிரைவர் அய்யப்பன், 39; என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வடலுாரில் கடந்த 19ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள், இதே வாகனத்தில் கொண்டுசென்ற புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்து, கடலுார் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து பின்னர் விடுவித்தது தெரிய வந்தது.

அதேபோல், நேற்று மீண்டும் விசாரணை செய்து, அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us