/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
/
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 15, 2025 11:17 PM
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மங்களூர் வட்டாரம், இ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட நல கல்வியாளர் சுந்தர்பாபு தலைமை தாங்கினார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் விஜயரங்கன் வரவேற்றார்.
இதில், 'புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு - 3.0' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதன் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புகையிலை தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, ஆவினங்குடி பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக் கடைகளில் புகையிலை விற்பனை குறித்து ஆய்வு செய்து, கடை உரிமையாளர்களுக்கு புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.