தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் இன்று 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி

கடலுாரில் இன்று 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி

கடலுாரில் இன்று 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : ஆக 29, 2025 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் கல்லுாரி மாணவர்களுக்கான 'நான் முதல்வன்-உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கல்விக் கடன் வழங்கும் முகாம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடக்கிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் கடலுார் மாவட்ட கல்லுாரி மாணவர்களுக்கான 'நான் முதல்வன்-உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கல்விக் கடன் வழங்கும் முகாம் கடலுார் கம்பியம்பேட்டை புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (29ம் தேதி) நடக்கிறது. நிகழ்ச்சி காலை 9:00 மணிக்கு துவங்கி நன்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.

நிகழ்ச்சியில் கல்வித்துறை அறிஞர்கள், பல்வேறு துறை தொழில் நிபுணர்கள் பங்கேற்று, உயர் கல்வியின் முக்கியத்துவம் , மாணவர்கள் வாழ்க்கை பாதையை தேர்வு செய்வது, வங்கிக் கடன் மற்றும் அரசு உதவித் தொகை பெறுவது, அரசின் திட்டங்கள், உதவிகள் போன்றவைக் குறித்து தெரிந்துக்கொள்ளுதல், உயர் கல்விக்கு வழிக்காட்டுதல் போன்ற தலைப்புகளில் கருத்துரை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியையொட்டி அரங்கு அமைக்கப்பட்டு மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் நடக்கிறது. மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு, ஒவ்வொரு கல்லூரிக்கும் அதன் கல்லுாரி முதல்வர் கல்விக் கடன் தொடர்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவார்.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் http://www.vidyalakshmi.co.in/students என்ற இணைய தளம் மூலம், கல்வி சான்று, ஜாதிச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஏதுவாக முகாமில் இணையவழியில் உடனடி சான்றுகள் வழங்க, மேலாளர் தலைமையில் மாவட்ட இ சேவை உதவி மையம், வங்கி அதிகாரிகளின் முன்னோடி வங்கி அரங்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் விருப்பம் உள்ள மாணவர்கள் முகாமில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us