/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
ADDED : அக் 14, 2024 11:21 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை பரவலாக மழை பெய்தது. அதில், தொழுதுார் 15.02 மி.மீ., வடக்குத்து 2.01, பெளாந்துாரை 9.27, வானமாதேவி 7.08, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 2, பண்ருட்டி 6.09, குறிஞ்சிப்பாடி 4.01, கொத்தவாச்சேரி 3.01, சேத்தியாத்தோப்பு, 2.61, லால்பேட் 2, கீழ்சிவிரி 2, விருத்தாசலம் 1.22, காட்டுமன்னார்கோவில் 1, சிதம்பரம் 5.1, புவனகிரி 6, கடலுார் 9.26, கலெக்டர் அலுவலகம் 11.04, பரங்கிப்பேட்டை 14. 3, அண்ணாமலை நகர் 10.25 மி.மீ., மழை பதிவாகியது.
நேற்று காலை முதல் லேசான துாரல் மழை இருந்தது. மாலையில் மீண்டும் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனமழை அறிவிப்பு எதிரொலியாக கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (15ம் தேதி) விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.