/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இன்று தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
/
இன்று தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
இன்று தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
இன்று தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : பிப் 08, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: திட்டக்குடியில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திட்டக்குடி, அண்ணா திடலில் இன்று 8ம் தேதி மாலை 5:00 மணிக்கு பொதுக் கூட்டம் நடக்கிறது. எனது தலைமையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச்சாளர்கள் கருணாநிதி, செல்வராஜ் கண்டன உரையாற்றுகின்றனர். நகர செயலர் பரமகுரு வரவேற்கிறார்.
பொதுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.