/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கழிவறை சுத்தம் செய்யும் பணி தினமலர் செய்தி எதிரொலி
/
கழிவறை சுத்தம் செய்யும் பணி தினமலர் செய்தி எதிரொலி
கழிவறை சுத்தம் செய்யும் பணி தினமலர் செய்தி எதிரொலி
கழிவறை சுத்தம் செய்யும் பணி தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : டிச 28, 2025 05:56 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பல கோடி ரூபாய் செலவில் பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இவற்றில் திருவள்ளுவர் நகர் உட்பட சில இடங்களில் மட்டுமே மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதையும் முறையாக பராமரிப்பதில்லை.
திருவள்ளுவர் நகரில் உள்ள பொது கழிவறையில் ஆறு மாதத்துக்கு முன் செப்டிக் டேங்க் நிரம்பியதால், அதனை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளதாக தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணராஜன், சேர்மன் ஜெயந்தி உத்தரவின்பேரில் கழிவறையை சுற்றி இருந்த புதர்களை அகற்றி செப்டிக் டேங்கை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.