/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொல்காப்பியன் நினைவுநாள்; கண் சிகிச்சை முகாம்
/
தொல்காப்பியன் நினைவுநாள்; கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜூலை 15, 2025 07:43 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சிப் பள்ளியில், திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் நினைவு நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கடலுார் மைய மாவட்ட வி.சி., இஸ்லாமிய ஜனநாயக பேரவை, புதுச்சேரி வெங்கடேஸ்வரா மெட்சிட்டி சிறப்பு உயர் சிகிச்சை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி மையம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கடலுார் மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாநில துணை செயலாளர் அன்வர்பாஷா வரவேற்றார். பேரவை மாநில செயலாளர் அப்துல் ரகுமான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முகாமில், கண்புரை, கண்ணில் நீர்வடிதல், துாரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது.
வி.சி., மண்டல துணை செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், துணை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர்கள் தென்றல், அய்யாதுரை, விஜயகுமார், கர்ணா, ராகுல், ரஞ்சித் உட்பட பலர் பங்கேற்றனர்.