ADDED : செப் 26, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் பச்சையாங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
கடலுார் கோட்ட மின் பகிர்மான கழகம் சார்பில் பச்சையாங்குப்பம் பகுதியில் அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நாளை காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
அதாவது அவசர காலத்தில் மின் வினியோகம் சீர் செய்வது குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒத்திகை நடக்கிறது.
இதனால், பச்சையாங்குப்பம், சொத்திக்குப்பம், வானவில், காரைக்காடு, கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை, செயற்பொறியாளர் அருளானந்தன் தெரிவித்துள்ளார்.
