/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவதிகை ரங்கநாதபெருமாள் கோவிலில் நாளை பாலாலயம்
/
திருவதிகை ரங்கநாதபெருமாள் கோவிலில் நாளை பாலாலயம்
ADDED : பிப் 02, 2025 04:59 AM
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெரு மாள் கோவில் திருப்பணிக் காக பாலாலயம் நாளை (3ம் தேதி) நடக்கிறது.
பண்ருட்டி அIத்த திருவதிகையில் 1500 ஆண்டுகால பழமைவாய்ந்த ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவில் மகாகும்பாபிேஷகம் கடந்த 2010ல் நடந்தது.
இந்நிலையில் இக்கோவில் திருப்பணி துவக்கிட மக்கள் கோரிக்கை விடுத்தனர். அறநிலையத்துறை சார்பில் ஆணையர் சிறப்பு நிதி ரூ.67 லட்சம் ரூபாய் மதிப்பில் மூலவர் ரங்கநாதபெருமாள் விமானம், தாயார் விமானம், ஆண்டாள் விமானம், கோதண்டராமர் விமானம், கருடாழ் வார் விமானம், சக்கரத் தாழ்வார் விமானம் ஆகியவை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு நாளை ( 3 ம்தேதி) காலை பாலாலயம் பிரதிஷ்டை நடக்கிறது. விழாவையொட்டி இன்று மாலை பகவத் பிரார்த்தனை, அக்னி பிரதிஷ்டை,வாஸ்துசாந்தி, கும்பபூஜை, பஞ்சசுக்த பூஜை, முதற்கால பூர்ணாஹீதி நடக்கிறது.
நாளை (3ம் தேதி) 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் பாலாலயம் பிரதிஷ்டை நடக்கிறது.