/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சில்வர் பீச்சில் டன் கணக்கில் குவிந்துள்ள ஆகாய தாமரை
/
சில்வர் பீச்சில் டன் கணக்கில் குவிந்துள்ள ஆகாய தாமரை
சில்வர் பீச்சில் டன் கணக்கில் குவிந்துள்ள ஆகாய தாமரை
சில்வர் பீச்சில் டன் கணக்கில் குவிந்துள்ள ஆகாய தாமரை
ADDED : டிச 05, 2024 05:42 AM

கடலுார்; கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் டன் கணக்கில் குவிந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெஞ்சல் புயல் காரணமாக கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர், தென்பெண்ணை ஆற்றின் வடிகால் பகுதியான கடலுார் வங்காள விரிகுடா கடலில் கலந்தது. இதேபோன்று, கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலுார் கடலில் கலந்தது.
இந்த தண்ணீரில் அடித்துவரப்பட்ட ஆகாய தாமரை, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரையோரம் டன் கணக்கில் குவிந்துள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் ஆகாய தாமரையால், பீச் பொலிவிழந்து காணப்படுகிறது.
எனவே, கடற்கரையில் குவிந்துகிடக்கும் ஆகாய தாமரையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.