/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் டன் கணக்கில் பாறை மீன்கள் சிக்கின
/
கடலுாரில் டன் கணக்கில் பாறை மீன்கள் சிக்கின
ADDED : ஆக 13, 2025 05:39 AM

கடலுார் : கடலுாரில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் டன் கணக்கில் பாறை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் திரும்பினர்.
கடலுார், தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நுாற்றுக்கும் அதிகமான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன் தேவனாம்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் 5 கிலோ முதல் 30 கிலோ வரை எடையுள்ள பாறை மீன்கள் சிக்கியது.
விசைப்படகுகளில் 10 முதல் 15 டன் வரை மட்டுமே மீன்களை வைத்திருக்க முடியும் என்பதால், சராசரியாக 10 டன் வரை மட்டுமே மீனவர்கள் பிடிக்கின்றனர். 15க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற தேவனாம்பட்டிணம் மீனவர்கள் நேற்று 50 டன் வரையிலான பாறை மீன்களை பிடித்து வந்தனர்.
கரைக்கு திரும்பியதும், பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர். ஒரு கிலோ 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது. லாரி மூலம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.