/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆரோவிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
/
ஆரோவிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ADDED : ஜன 28, 2024 06:12 AM

வானூர், : தொடர் விடுமுறை காரணமாக ஆரோவிலில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில்,. சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அமைதி பூங்காவாக உருவாக்கப்பட்ட ஆரோவிலில், உருண்டை வடிவிலான மாத்ரி மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் குடியரசு தினம், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால், தமிழக பகுதி மட்டுமல்லாமல்,ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நேற்று ஆரோவில் பகுதிகளில் உள்ள விசிட்டர் சென்டர், மாத்ரி மந்திர் ஆகிய பகுதிகளில் குவிந்தனர்.ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த நுாற்றுக்கணக்கானோர், வி.ஐ.பி., கேட் வழியாக மாத்ரி மந்திர் தியான மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
புக்கிங் செய்யாமல் வந்த சுற்றுலாப்பயணிகள் விசிட்டர் சென்டரில் இருந்து ஒன்னரை கி.மீ., நடைபயணமாக வந்து, மாத்ரி மந்திர் வெளிப்புறதோற்றத்தை பார்த்து ரசித்தனர்.
அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்ததால், போக்குவரத்தை கட்டுப்படுத்த இடையஞ்சாவடி சாலை-விசிட்டர் சென்டர் கேட் சந்திப்பு பகுதியில் ஆரோவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.