/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மீது டிராக்டர் மோதல்: இருவர் பலி
/
பைக் மீது டிராக்டர் மோதல்: இருவர் பலி
ADDED : ஜன 04, 2024 02:59 AM

மந்தாரக்குப்பம்; நெய்வேலி அருகே பைக் மீது, டிராக்டர் மோதியதில், சிறுமி உள்ளிட்ட இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த தெற்கு சேப்ளாநத்தத்தை சேர்ந்தவர் ராஜசெல்வம்,38; விவசாயி. இவரது மகள் யாழினி,4; மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி., படித்து வந்தார்.
நேற்று காலை 8:45 மணிக்கு ராஜசெல்வம், மகள் யாழினியை பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்றார். அப்போது, வழியில் அதேபகுதியில் பூ வியாபாரம் செய்யும் ராமலிங்கம் மனைவி கம்சலா,58; ராஜசெல்வத்திடம் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக் கொண்டார்.
மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் அருகே வந்தபோது, எதிரே வந்த குடிநீர் டிராக்டர், பைக் மீது மோதியது.
அதில், நிலைதடுமாறி கீழே விழுந்த யாழினி, கம்சலா ஆகியோர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. அதில், இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலின்பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் விரைந்து சென்று, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.