/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை கோரி டிராக்டர் டிரைவர்கள் சாலை மறியல்

ADDED : அக் 01, 2024 06:00 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் டிராக்டர் டிவைரை ஆபாசமாக பேசிய தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, நான்குமுனை சந்திப்பு வழியாக நேற்று இரவு 7:00 மணிக்கு கரும்பு லோடு டிராக்டர்கள் சென்றன.
அப்போது, பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஒருவர், இந்தப் பக்கமாக கரும்பு டிராக்டர்கள் செல்லக் கூடாது என டிராக்டர் டிரைவரை ஆபாசமாக திட்டினார்.
இதனால், கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் டிரைவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நான்குமுனை சந்திப்பில் டிராக்டர்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர்கள் சிவன்யா, தாமோதரன் மற்றும் போலீசார் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிரைவரை ஆபாசமாக பேசிய தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததன் பேரில், 8:00 மணிக்கு மறியலை கைவிட்டனர்.