/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., ஆலையில் அரவை நின்றதால் டிராக்டர் டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
/
எம்.ஆர்.கே., ஆலையில் அரவை நின்றதால் டிராக்டர் டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
எம்.ஆர்.கே., ஆலையில் அரவை நின்றதால் டிராக்டர் டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
எம்.ஆர்.கே., ஆலையில் அரவை நின்றதால் டிராக்டர் டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 15, 2024 06:34 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நின்றதால், கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் டிரைவர்கள் திடீர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளில் இயந்திரம் பழுது காரணமாக திடீரென அரவை பணி நின்றது. ஆலையின் பொறியாளர்கள் இயந்திர பழுதினை விடிய விடிய சரிபார்த்து விடியற்காலை 3:00 மணியளவில் கரும்பு அரவையை மீண்டும் துவக்கினர்.
மீண்டும் இயந்திரம் பழுதால் காலை 6:30 மணிக்கு கரும்பு அரவை நின்றது. கரும்பு லோடு ஏற்றி வந்த 130 கரும்பு லோடு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த டிராக்டர் டிரைவர்கள் அரவையை துவக்க வேண்டும் என, கோரி மதியம் 12:00 மணியளவில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தலைமை கரும்பு அலுவலர் ரவிக்கிருஷ்ணன், அலுவலக மேலாளர் முருகன், இன்ஸ்பெக்டர் சேதுபதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிராக்டர் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், ஆலை இயந்திரம் பழுது காரணமாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆலை அதிகாரிகள், விவசாயிகள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இயந்திரத்தை பழுது நீக்கி, 10 நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் அரவை துவங்க முடியும். ஏற்றி வந்த கரும்பு லோடுகளை பெரியசெவலை ஆலைக்கு எடுத்து செல்லுமாறும்,அதற்கான வாடகை மற்றும் டீசல், டிரைவர் படி 700 ரூபாய் உள்ளிட்டவைகள் தருவதாக தெரிவித்தனர்.
அதனை ஏற்காத டிரைவர்கள் வேறு ஆலைக்கு கரும்பு எடுத்து செல்லமுடியாது இந்த ஆலையில்தான் அரவை செய்ய வேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.