/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தில் பாதித்தோருக்கு வர்த்தக சங்கம் உதவி
/
தீ விபத்தில் பாதித்தோருக்கு வர்த்தக சங்கம் உதவி
ADDED : பிப் 04, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே தீ விபத்தில் கடைகளை இழந்தவர்களுக்கு வர்த்தக சங்கத்தினர் நிவாரணம் வழங்கினர்.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட்டில் நிர்மல்ராஜ் என்பவர் உட்பட, 5 பேரின் கடைகள் தீ விபத்தில் எரிந்தது. சுமார் 5 லட்சம ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் மூலம், செயலாளர் ராமலிங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார். சங்க பொருளாளர் ஆசாத், துணைத் தலைவர்கள் ஆறுமுகம், ராஜேந்திரன், ஜலால்ராஜா, செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.