/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் திட்டக்குடியில் பரபரப்பு
/
நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் திட்டக்குடியில் பரபரப்பு
நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் திட்டக்குடியில் பரபரப்பு
நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் திட்டக்குடியில் பரபரப்பு
ADDED : டிச 19, 2025 06:35 AM

திட்டக்குடி: காய்கறி மார்க்கெட் கடைக ஏலம் விடும் விவகாரத்தில், வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சியாக இருந்தபோது, பஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது.
காய்கறி மார்க்கெட்டின், 40 கட்டடம் போதிய பராமரிப்பின்றி, இடிந்து விழும் சூழல் இருந்ததால் வியாபாரிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து, கடந்த 2023ல் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், 3 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில், 38 கடைகள் அடங்கிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடை வளாகம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட 38 கடைகளை ஏலம் விடுவதாக கடந்த இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை 10:00 மணியளவில் நகராட்சி கமிஷனர் முரளிதரன் தலைமையில் ஏலம் துவங்கியது.
அப்போது, பழைய மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த 40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையை எங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும்; மொத்த கடைகளையும் தனி நபருக்கு ஏலம் விடக்கூடாது; என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கமிஷனர் அறையில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசிய பின், வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து, காலை 11:50 மணியள வில், மீண்டும் ஏலம் துவங் கியது. இதில் 3 பேர் க லந்து கொண்டனர். அவர் கள் அங்கிருந்த ஏலப்பெட்டியில் டி.டி.,யை (காசோலை) போட்டனர்.
அதில் அதிக தொகையை கேட்ட நபர் ஒருவருக்கு, 38 கடைகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

