/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் எம்.பி.,க்கு வர்த்தகர் சங்கம் நன்றி
/
கடலுார் எம்.பி.,க்கு வர்த்தகர் சங்கம் நன்றி
ADDED : ஜன 04, 2026 04:28 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வந்தே பார்த் ரயில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்ட விஷ்ணுபிரசாத் எம்.பி.,க்கு, நகர அனைத்து வர்த்தகர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி செல்லும் வந்தேபாரத் ரயில், விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் நின்று செல்ல வேண்டும் என, விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர் நல சங்கத்தினர், விஷ்ணு பிரசாத் எம்.பி.,யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பேரில், கடந்த டிச., மாதம் பார்லிமென்ட்டில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், விஷ்ணுபிரசாத் எம்.பி., சென்னை எழும்பூர் - திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில், விருத்தாசலம் ரயில்லே ஜங்ஷனில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அதன்பேரில், கடந்த 1ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில், விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் நின்று செல்கிறது. இந்நிலையில், விருத்தாசலத்திற்கு வந்த விஷ்ணுபிரசாத் எம்.பி., நகர அனைத்து வர்த்தகர் சங்க தலைவர் கோபு தலைமையிலான நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
மாநில துணை தலைவர் பழமலை, ஆலோசகர் சண்முகம், செயலாளர் மணிவண்ணன், பொருளா ளர் சேட்டு முகம்மது, இளைஞரணி நிஷாந்த், பிரபு உடனிருந்தனர்.

