/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் கலெக்டரிடம் வணிகர்கள் மனு
/
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் கலெக்டரிடம் வணிகர்கள் மனு
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் கலெக்டரிடம் வணிகர்கள் மனு
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் கலெக்டரிடம் வணிகர்கள் மனு
ADDED : ஜன 10, 2025 06:23 AM

கடலுார்: கடலுாரில் அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வதை தடுக்கக்கோரி கலெக்டரிடம், வணிகர்கள் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலுார் மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், கடலுார் மாநகர தலைவர் துரைராஜ், மாவட்ட இணை செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளமனு;
கடலுார் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக, மாநகராட்சி அலுவலர்கள் கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பைகளை மட்டுமின்றி அரசால் அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். மிகப்பெரிய தொகை அபராதமாக வசூலித்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டும். இந்த செயலால் எங்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளில் பெரும் தடை ஏற்பட்டு வருகிறது. மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
மக்களிடையே மாற்று பைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனாலும், இந்த மாற்றத்தை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். மக்களிடையே மாற்றுப்பை கொண்டு வருவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துணி அல்லது காகித பைகளை தக்க விலையில் அரசு வழங்க வேண்டும். அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும். அபராதங்களை குறைக்க வேண்டும். கலெக்டர் தலையிட்டு தடையற்ற வணிக சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

